ஓவியா போன்ற நண்பர்களே வெகுமக்களின் விருப்பம்


இந்த வாரம் #BIGBOSS கற்று தந்தவை!

ஜூலியின் தாழ்வு மனப்பான்மைச் சராசரி மனிதர்களை விட அதிகமாகவே தெரிகிறது. குறைந்த சுய மரியாதைக் கொண்ட ஜூலி பல முறை நிராகரிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டாலும் காயத்ரி குழுவில் இடம் பெற முயற்சிச் செய்கிறார்.

தன்னையே நேசிக்க தவறியதும், சந்தோஷமான மனநிலையில் இல்லாமல் இருப்பதுமே காரணம். இதுவே பலரிடம் நம் சமுதாயத்தில் உள்ள பிரச்சனை.

ஓவியாவைப்போல தனியாக இருந்தால் ஜூலி மகிழ்ச்சியாக இருக்க முடியாது. ஜெய்க்க வேண்டும் என்ற நோக்கம் மாறி அது காயத்ரி பாத்திரத்தைத் தழுவ முயற்சிப்பதாக இருக்கிறது.

மற்றவர்களை அவமதிப்பது, ஆதிக்கம் செலுத்துவது அவளுக்கு உள்ளுக்குள் ஒரு நம்பிக்கையையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்துகிறது, அதை ஓவியாவை தவிர வேறு யாரிடமும் அவளால் செய்ய முடியாது/முடியவில்லை.

ஜூலி நினைப்பதைப் பேசச் செல்லி ஆறுதல் சென்ன ஓரே நபர் ஓவியா. எனினும், ஓவியா அந்த இடத்தை விட்டுச் சென்றதும் ஜூலி ஓவியவை தரம்தாழ்த்திப் பேசிக் காயத்ரி ஈகோவைத் திருப்திப்படுத்த முயல்கிறார்.

தந்திரமாக இருப்பது, துரோகம் விளைத்தல், நேர்மையற்ற நிலை, பழிவாங்குதல் இவை எல்லாவற்றுக்கும் மேலாகத் தன்னம்பிக்கையற்ற நிலை ஜூலியின் குணாதிசியங்களாகத் தென்படுகிறது.

மக்களுக்கு ஓவியாவின் மீது பற்று ஏற்பட இதுவே காரணமாகவும் அமைகிறது. அவளுடைய தன்மை, குணம், நேர்மை ஆகியவற்றுடன் தங்களை தொடர்புப்படுத்திக் கொண்டார்கள் மக்கள். அவளைப் போன்ற குணங்களைப் பெற்ற நண்பர்களைப் பெறவே ஏங்குகிறார்கள். ஓவியா வழங்கிய புத்திசாலித்தனமான நடைமுறை ஆலோசனைகள் சிலவற்றைப் பயன்படுத்தவும் செய்யலாம்.

இந்தச் சமுதாயத்தில் ஜூலி, காயத்ரி, நமிதா மற்றும் ரைசாவை போன்ற குணங்கள் கொண்டுவர்கள் தான் மகிழ்ச்சியற்று இருப்பதுடன் மற்றவர்களை நிம்மதியாக இருக்கவும், விருப்பம் போல வாழவும் விடுவதில்லை. தங்கள் விருப்பத்திற்கு மாறாக மற்றவர்கள் நடந்து கொண்டால் அவர்களைத் தனிமைப்படுத்தி, சங்கடப்படுத்துவதிலேயே குறியாக இருப்பார்கள்.(உதாரணமாகப் பரணி)

வியக்கத்தக்க வகையில், நமது சமுதாயமும் அதைத்தான் செய்கிறது – வித்தியாசமாக நடந்து கொள்கிறவர்களையும், வாழ்க்கையில் வேறு விதமான செயல்களைச் செய்பவர்களையும் சமுகத்தில் இருந்து விலக்கி வைத்து விடுகிறது.

பரணியைப் போல் பலர் சமுதாய அழுத்தம் தாங்காமல் வளைந்துக் கெடுத்து வாழ்க்கையின் சாரத்தை இழந்து விடுகிறார்கள்.

பலர் ஓவியாவை போன்று எல்லாவற்றிலும் இருந்து விலகி நின்று முன்னேற்றத்திற்காக உழைக்கிறார்கள்.

தன் எதிர்காலச் சந்ததியருக்கு ஒரு மகிழ்ச்சியான, வெற்றிகரமான மேடை அமைத்து எதிர்த்துப் போராடுபவர்களின் பிரதிநிதியாக ஓவியா பிரதிபலிக்கிறார்.

Leave a Response