சென்னை வெள்ளத்துக்கு இணையான ஓவியா வெள்ளம் – பிக்பாஸ் விமர்சனம்

பிக்பாஸ்

நல்லா எஞ்சாய் செய்தோம்..வித வித மேக் அப், உடைகள் அடுத்தவர் உதவி இல்லாமல் சாத்தியம் இல்லை…வீட்டில் தினம் சுவாரசியம் இருக்காது .சுவாரசியத்துக்கு சில ஸ்கிரிப்ட், சில நிஜம்..
எப்பவும் பொய் சொல்லும் பொழுது நிஜ சதவிகிதம் அதிகமா இருந்தால் மட்டுமே நம்ப முடியும்..கடைசியில் அனைத்தையும் லாஜிக் ஆக்கும் திறமை ஒரு கதை சொல்லிக்கு அல்லது இயக்குனருக்கு தேவை..இந்த பிக் பாஸ் இயக்குனர்களுக்கு கண்டிப்பாக இருக்கும்.
எனி வே மாஸ் சைக்காலஜி புரிந்து இருக்கு..யார் யாரை டிரிக்கர் செய்தார்களோ இல்லையோ நம்மை நன்றாக டிரிக்கர் செய்தது பி.பி டீம்.
அதனால் நாம் முட்டாள் எல்லாம் ஆகவில்லை. தமிழர்கள் மிகத்தெளிவு .சீசன் இல்லாதபொழுது நண்பா துரோகி என்றெல்லாம் கூட டிவிட் டிரெண்ட் கொண்டு வந்தார்கள் .இப்போ கேக்கவே வேணாம் ..
தனிப்பட்ட முறையில் புகழ் அடைய இந்த டிரெண்ட் உபயோகித்துக் கொள்ள அடுத்து எல்லாரோடும் மகிழ்வாய் இருக்க மீம்ஸ் பாடல்கள் மூலம் தன் கிரியேடிவிட்டி தெரிய என்று பல விதங்களில் சேவ் ஓவியா வை அதகள படுத்தி விட்டார்கள்..
இதெல்லாம் ஒரு திருவிழா .கலந்துக்கொள்ளாமல் இருப்பது அவரவர் விருப்பம்..கலந்து எஞ்சாய் செய்பவர்கள் வாய்ப்பை தவற விடா வாழ்வை அதன் போக்கோடு ரசித்து கொண்டாடுபவர்கள்.
சென்னை வெள்ளத்துக்கு அடுத்து ஓவியா வெள்ளம் இணையத்தை மேலும் இணைத்தது என்று சொன்னால் மிகையில்லை..பிரபலம் அது இது எல்லாம் காற்றோடு அடித்து சென்று..நீ ஓவியா பாசறைன்னா வா இல்லாட்டி போயிடு ரேஞ்சில் கொண்டு வந்து பிரபலங்களுக்கே பீதி ஆகியது..
இதுப்போன்ற ஒரு பூகம்ப சம்பவங்கள் இணையத்தில் நடந்து ஒரு உலுக்கு உலுக்கி எல்லாரையும். சமமாக்கி விட்டு செல்வது மிக நல்லது…
இதன் அழகியல் உற்சாகம் எல்லாம் மிக ரசிக்கத்தக்கது..
எதுவரை .
ஒவியா போல் இருக்கேன் என்று ஜாலியா ஆடிக்கொண்டு வேலை செய்யாமல் இருந்தால் ஒரு நாளில் வீடு அவுட்..
ஜுலி போல என்று அடுத்தவரை குத்திக் காட்டினால், காயத்திரி போல கோவம் வருது இப்படி எல்லாம் சொன்னா மகாப்பாரத போரை சந்தித்து நிம்மதி குலையும்..
சினிமா போல வந்தோமா ஜாலியா தலைவா, தளபதின்னு சொல்லி விசில் அடிச்சோமா , எஞ்சாய் செய்தோமா, இரண்டு நாள் அதைப்பற்றி பேசினாமோ அத்தோடு முடிச்சோமா என்று விட்டுடனும்..
உளவியல் ஆலோசனைகள் அது இது எல்லாம் ஆரம்பிச்சு நம் இயல்பை சிதைச்சுடக் கூடாது..
பிபி இனி back to pavilion.
அடுத்து கைத்தட்டும், கொண்டாடும் வாய்ப்பு வந்தால் முதல் ஆளாக கியுவில் நிற்கும் ஆசைதான் வாழ்வை இன்னும் அழகாக்கிறது..

Leave a Response