
தமிழ்நாட்டின் தலையாய பிரச்சனையாக இன்று கருதப்படுவது “ஓவியா, ஜூலி” க்கு என்னாகும் என்பதே.. நீங்கள் உயிர்போற இந்த பிரச்சனையை தெரிஞ்சுக்க பிக் பாஸில் மூழ்கிய இந்த மூன்று வாரத்தில்… நீங்கள் கண்டுக்கொள்ளாத தமிழகம், இந்தியாவில் நடந்த ஒன்றுக்கும் உதவாத, ஒப்புசப்பில்லாத மற்ற சாதாரண சம்பவங்கள் சில நடந்தது..இதுபற்றி தெரிந்து கொள்ளுங்களேன்..
* சென்னை குட்கா ஸ்கேமில், நீங்கள் நேர்மையின் சிகரம் என்று சொன்ன கிரிஜா வைத்திய நாதன், பொய் சொல்லி மறைத்திருக்கிறார் கோர்ட்டில்.
* பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு ராஜ மரியாதை. ஷாப்பிங் கொண்டாட்டங்கள். இரண்டு கோடி வரை லஞ்சம். கூடவே இன்னும் வெளிவராத வீடியோக்களுக்கு நடக்கும் குதிரை பேரம்.
* சசிகலாவை கையும் களவுமாக பிடித்த ரூபாவுக்கு பணிமாற்றம்.
* ஜெயலலிதாவிற்கு வைத்தியம் பார்த்த நர்ஸ், மகள்களுடன் தற்கொலை முயற்சி. கணவர் தற்கொலை செய்து ரெண்டு வாரம் ஆனதாம்.
* கமலின் டிவீட்டால் தமிழக அமைச்சர்களில் மெயில் ஐடிகள் அழிப்பு.
* கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் 11,400 விவசாயிகள் தற்கொலை உண்மைதான் என்று மத்திய அமைச்சர் ஒப்புதல்.
* அடுத்த ஆண்டு எஞ்சினியரிங் சீட்டுக்கு +2 மதிப்பெண்கள் அவசியமா என்பது சொல்ல முடியாது, தமிழக அமைச்சர்.
* மூன்று நிமிடத்திற்கு மேல் டோல்கேட்டில் காத்திருந்தால் கட்டணம் இல்லை என்கிற செய்தியை ரொட்வேய்ஸ் துறை மறுப்பு.
* இந்திய மகளிர் அணி பெண்கள் கிரிக்கெட் இறுதிப்போட்டிக்கு நுழைந்தது.
* சென்னையில் இதுவரை சிறப்பாய் நடந்து வந்த சென்னை ஓப்பன் டென்னிஸ் இடம் மாற்றி சென்னையிலிருந்து நழுவியது,
கண்டுக்கொள்ளாத தமிழக அரசால்.
* நெடுவாசல், மீத்தேன், நீட் எல்லாம் இன்னும் அதே கொடுமை நிலையில்தான்.
இப்ப சொல்லுங்க, சேவ் ஓவியா, வாழ்க ஓவியா!!!


