திவ்யாபாரதி, ஜெயராணி ஆகியோருக்கு பெரியார் சாக்ரடீஸ் விருது – அஜயன்பாலா அறிவிப்பு

பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது 2017 பற்றி எழுத்தாளர், இயக்குநர் அஜயன்பாலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…..

சீரிய பண்பும் சிறந்த நுண்ணறிவும் பெரியார் கொள்கையை முன்னெடுத்துச் செல்வதில் அளப்பரிய நேசமும், மனித நேயத்தின் பால் மாறாத பற்றும் கொண்ட பெரியார் சாக்ரடீஸ் கடந்த 2015-ஆம் ஆண்டு மே-12 ம் நாள் சாலை விபத்தின் காரணமாக 44 ம் வயதில் உயிர் நீத்தார்.

அவரது நினைவைப் போற்றும் வகையில் பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருதுக்குழு அவரது நண்பர்கள் மூலம் உருவாக்கப்பட்டு 2015-ஆம் ஆண்டு முதல் காட்சி மற்றும் ஊடகத்துறைகளில் தன்னலமற்ற சேவை செய்பவர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கி கவுரவித்து வருகிறது.

2015-ஆம் ஆண்டு ஆர்.பி.அமுதன்(ஆவணப்பட இயக்குனர்) அவர்களும், 2016-ஆம் ஆண்டு ம.செந்தமிழன் (எழுத்தாளர்)அவர்களும் இந்த விருதைப் பெற்றுள்ளனர்.

அந்த வரிசையில் இந்த வருடம்சமூக முன்னேற்றத்துக்கான 2017-ம் ஆண்டு பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது

1. திவ்யா பாரதி, ஆவணப்பட இயக்குனர்
(கக்கூஸ் ஆவணப்படம் மூலமாக ஒடுக்கப்பட்ட மக்களின் ப்ரச்னையை காட்சி ஊடகத்தின் சிறந்த பங்களிப்புக்காக)

2. ஜெயராணி, எழுத்தாளர்
( தலித்முரசு வில் வெளியான ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வை புகைப்பட பதிவு ஜாதியற்றவளின் குரல் கட்டுரைத் தொகுப்பு மற்றும் கையால் மலம் அள்ளும் தொழிலுக்கு எதிரான மஞ்சள் நாடகப் பிரதி ஆகிய பங்களிப்புகளுக்காக)

ஆகிய இருவருக்கும் வழங்கப்படவிருக்கிறது.

ஆகஸ்ட் 6-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு ஆழ்வார்பேட்டை சிஐடி நகர் கவிக்கோ மன்றத்தில் நிகழவிருக்கும் விழாவில் முக்கிய ஆளுமைகள் முன்னிலையில் இவ்விருது அவர்களுக்கு வழங்கப்படவிருக்கிறது.

டாக்டர்.நாச்சி முத்து
எழுத்தாளர்.அஜயன் பாலா
பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது விழாக்குழு

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response