
2௦09 முதல் 2014 வரையிலான தமிழக அரசு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விருதுபெற்ற பலரும் தங்களது மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.. அதேசமயம் இந்த விருதில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக பலர் தங்களது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில் ‘அழகர்சாமியின் குதிரை’ படத்திற்கும் ‘நான் மகான் அல்ல’ படத்தின் களிமாக்ஸ் சண்டைக்காட்சிக்காக அதன் ஸ்டண்ட் இயக்குனர்களுக்கும் விருது கிடைக்கும் என எதிரபார்த்த சுசீந்திரன் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள விருதுகள் ஏமாற்றம் அளிப்பதாக தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இயக்குனரும் நடிகருமான ஏ.வெங்கடேஷ், ‘அங்காடி தெரு’ படத்தில் வில்லன் வேடத்தில் கலக்கியவர் அந்தப்படத்திற்கு பிறகுதான் அவர் பிசியான நடிகராக மாறினார்.. அந்தப்படத்தில் அவரது வில்லத்தனமான நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. அதனால் தனக்கு விருது கிடைக்கும் என எதிர்பார்த்தவர் தற்போது ஏமாற்றாத்துக்கு ஆளாகியுள்ளார். அந்த வருடத்தின் சிறந்த வில்லன் விருது ‘வில்லு’ படத்தில் நடித்த பிரகாஷ்ராஜுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தனது வில்லத்தனமான நடிப்பைவிட, பிரகாஷ்ராஜின் வில்லன் நடிப்பு எந்தவிதத்தில் உசத்தியாக போய்விட்டது என குமுறலை வெளிப்படுத்தியுள்ளார் ஏ.வெங்கடேஷ்.


