‘திமிரு’ என்கிற படத்தில் ‘ஏலே மாப்ளே’ என மிரட்டல் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த ஸ்ரேயா ரெட்டியை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியுமா?. தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு ‘அண்டாவ காணோம்’ என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் வேல்மதி இயக்கியிருக்கிறார். இவர் சுசீந்திரனிடம் உதவி இயக்குனராக இருந்தவர்.
ஜே.எஸ்.கே பிலிம்ஸ் சதீஷ்குமார் தயாரித்துள்ள இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது.. இந்த விழாவில் கலந்துகொண்ட இயக்குனரும் நடிகருமான மனோபாலா, ஸ்ரேயா ரெட்டியை பற்றி பேசும்போது, “ஸ்ரேயா ரெட்டியை தமிழ் சினிமாவின் ஸ்மிதா படேல், ஷபனா ஆஸ்மி என சொல்லலாம்.” என புகழாரம் சூட்டினார்..