
வி.ஐ.பி படத்தை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள ‘வி.ஐ.பி-2’ படத்திலும் தனுஷ், அமலாபால் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். இந்த இரண்டாம் பாகத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். பாலிவுட் நடிகை கஜோல் இதில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் முதல் பாகத்தில் இடம்பெற்ற நடிகர்களில் பலரும் இதிலும் நடித்துள்ளனர்..
அதனால் வேறு புதிய கதாநாயகியை தேடாமல் அமலாபாலையே இதிலும் தொடர செய்துவிட்டார்கள்.. சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற இந்தப்படத்தின் விழாவில் கலந்துகொண்டு பேசிய அமலாபால் வி.ஐ.பி’. இரண்டாம் பாகத்தில் வேறு ஹீரோயினை நடிக்க வைப்பதற்காக என்னைக் கொலை பண்ணாமல் விட்டதற்காக தனுஷுக்கு நன்றி சொல்கிறேன்” என கூறியுள்ளளார்.


