
ஆடம் தாசன் என்பவர் இயக்கத்தில் பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான ‘பாம்பு சட்டை’ படம் பல மாதங்களாக கிடப்பில் கிடந்தது. தற்போது அந்த பிரச்சனைகளை எல்லாம் கடந்து ஒருவழியாக படத்தை ரிலீசுக்கு தயார் பண்ணினார் படத்தின் தயாரிப்பாளரான மனோபாலா. ஆனால் சென்சார் சான்றிதழுக்கு அனுப்பப்பட்டபோது, ஒரு காட்சியில் பாபிசிம்ஹா நிர்வாணமாக நடித்திருந்ததை சுட்டிக்காட்டி அதை வெட்ட சொன்னார்கள்.
ஆனால் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த காட்சி என்பதால் முதலில் தயங்கிய படக்குழு. படம் வெளியாவது தள்ளிக்கொண்டே போவதை உணர்ந்து அந்த காட்சியின் நீளத்தை குறைத்து ஆபாசம் இல்லாமல் மாற்றி சென்சார்போர்டு பார்வைக்கு அனுப்பினர். அதைப்பார்த்த அதிகாரிகளும் திருப்தியடைந்து பாம்பு சட்டை படத்துக்கு யு சான்றிதழ் கொடுத்துள்ளனர்.
அந்தவகையில் ‘யு’ சான்றிதழ் கிடைக்குமா என்பது சந்தேகக்குறியாக இருந்தநிலை மாறி இப்போது தமிழக அரசின் வரிச்சலுகைக்கே அப்படம் தகுதி பெற்று விட்டது. இதை தொடர்ந்து வரும் ஜனவரி 20-ந்தேதி பாம்பு சட்டை திரைக்கு வந்து விடும் என்கிறார்கள்.


