
அமீர் நாயகனாக நடித்த யோகி படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் தேவராஜ். அப்போதிருந்து சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல அடையாளம் பெற்றிருக்கிறார். ஜூன் 18 ஆம் தேதி ஐம்பதாவது அகவையில் அடியெடுத்து வைக்கிறார். அந்நாளில் தன் கண்களையும் உடலையும் தானம் செய்கிறார். நடிகராவதற்கு முன்பே கவிஞராகவும் பத்திரிகையாளராகவும் அடையாளப்பட்ட அவருடைய சமுதாய அக்கறை எழுத்துகளில் மட்டுமின்றி செயலிலும் வெளிப்பட்டிருக்கிறது. அவரை வாழ்த்துவதோடு அவர் வழியில் செல்ல முயல்வோம்.


