அல்லா என்றழைக்கு முன் அம்மா என்றழைத்தவன் என உரத்துச்சொன்ன கண்ணியமிகு தமிழர் பிறந்தநாள்

கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களின் 122ஆம் ஆண்டு பிறந்தநாள் இன்று 05-06-2017 -இந்நாளில் அவருக்குப் புகழ்வணக்கம் செலுத்தி நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

இந்தியாவின் ஆட்சி மொழியாக எந்தமொழி இருக்க வேண்டும்? என்ற விவாதம் நடத்தப்பட்டபோது. இந்தியப் பாராளுமன்றத்திற்குள் தமிழே! ஆட்சி மொழியாக இருக்க வேண்டும்! என்று முதல் முதலில் முழங்கிய பெருந்தகை.
நீங்கள் இசுலாமியர் ஆயிற்றே! ஏன் தமிழை ஆட்சி மொழியாகக் கேட்கிறிர்கள்? என்று கேள்வி எழுப்பியதற்கு,
நான் அல்லா! என்று அழைப்பதற்கு முன்பே,
அம்மா! என்று அழைத்தவன்.
இசுலாம் எங்கள் வழி!
இன்பத் தமிழே! எங்கள் மொழி! என்று இந்த உலகம் கேட்க உரக்க முழங்கிய மானத் தமிழர்.

இந்தத் தலைமுறை தமிழ்ப் பிள்ளைகளுக்கு முன்னத்தி ஏராக விளங்கக்கூடிய உண்மையும் நேர்மையும் தூய்மையும் எளிமையுமான மகத்தான அரசியல் தலைவர் நமது ஐயா கண்ணியமிக்க காயிதேமில்லத் அவர்களினுடைய 122ஆம் ஆண்டு பிறந்தநாள் இன்று (05-06-2017).

போற்றுதற்கும் வணக்கத்திற்கும் உரிய அந்தப் பெருமகனின் பிறந்தநாளில் நாம் பெருமிதத்தோடு அவருக்கு நம் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்!
நாம் தமிழர்!

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response