
ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லீ, அடுத்து விஜய்யை வைத்து தெறி’ எனும் படத்தை கொடுத்தார். தற்போது மீண்டும் விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையே அவர் சொந்தமாக “சங்கிலி புங்கிலி கதவ தொற” என்ற படத்தை தனது ஏ பார் ஆப்பிள் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார்.
எம்.ஆர்.ராதவின் பேரன் ஐக் இயக்குகிறார். வெறும் தைரக்சனோடு இன்று விடாமல், தான் ஏன் படம் தயாரிக்க வந்தேன் என்பது பற்றி இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் மனம் திறந்து பகிர்ந்து கொண்டார் அட்லீ.
“என் உருவத்தை பார்த்து இவன் என்ன பெருசா பண்ணிட போறான் என நினைக்காமல் ஏ.ஆர்.முருகதாஸ் சார் வாய்ப்பு கொடுத்ததால் தான் இயக்குனர் அட்லீயாக இங்கு உங்கள் முன் நிற்கிறேன். நிறைய கதைகள் கேட்டு அதில் ஒரு கதையாக தான் சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தை தேர்ந்தெடுத்தேன். நான் பேய்க்கு ரொம்ப பயந்தவன். அதனால தான் இந்த பேய் படத்தை எடுக்க நினைத்தேன்” என்றார் தயாரிப்பாளரும் இயக்குனருமான அட்லீ.


