
கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் மலையாள ஒளிப்பதிவாளர் ஜோமோன் டி ஜான்.. அடுத்ததாக கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் ‘துருவ நட்சத்திரம்’ படத்திற்கும் இவரே ஒளிப்பதிவு செய்துவந்த நிலையில் திடீரென இந்தப்படத்திளிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஒளிப்பதிவாளர் ரவி.கே. சந்திரனின் மகன் சந்தான கிருஷ்ணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
எதனால் இந்த திடீர் விலகல்..? பாலிவுட்டில் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் அக்சய் குமார் நடிக்கும் ‘கோல்மால் அகெய்ன்’ படத்தில் பணியாற்ற முடியுமா என ஏற்கனவே இவரை கேட்டிருந்தார்கள். ஆனால் அதில் கொஞ்சம் கால தாமதம் ஆகவே அதற்குள் ‘துருவ நட்சத்திரம்’ படத்தை முடித்துவிடலாம் என ஜோமோனை இழுத்துப்பிடித்து நிறுத்தி, வேலையை ஆரம்பித்தார் கௌதம் மேனன்..
இந்தநிலையில் இப்போது அங்கே ‘கோல்மால்’ பட வேலைகள் ஆரம்பிக்கவே கௌதமிடம் நிலைமையை விலக்கிவிட்டு பாலிவுட்டுக்கு பறந்துவிட்டார் ஜோமோன். அதுமட்டுமல்ல, “நல்ல விஷயங்கள் தேடி வரும்போது அதற்கு கொஞ்சம் விலைகொடுத்துதான் ஆகவேண்டும் பாஸ்..” என மிகப்பெரிய தத்துவம் ஒன்றையும் உதிர்த்துள்ளார் ஜோமோன்.
