ஜோதிகாவின் சாதனையை நெருங்குவாரா நயன்தாரா..?


தென்னிந்திய சினிமாவில் நடிகர்களுக்கு நிகரான ரசிகர்கள் கூட்டத்தினை கொண்டவர் நயன்தாரா. அவ்வாறே அவரது படங்களுக்கு கிடைக்கும் வரவேற்புக்களும் அதிகம். இந்நிலையில் தற்போது நயன்தாரா ஹீரோயினாக நடித்த டோரா படம் விரைவில் வெளிவரவிருக்கின்ற நிலையில் நேற்று முன்தினம் டீசர் வெளியிடப்பட்டது.

இன்று இரண்டு நாட்களே சென்ற நிலையில் தற்போது 1.3 மில்லியன் மேற்பட்டவர்கள் யு டியூபில் பார்வையிட்டுள்ளதுடன், 17 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர்.

இந்த நிலையில் ஜோதிகா நடித்த மகளிர் மட்டும் படத்தின் டீசர் வெளியாகி 10 நாட்களில் 20 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் யுடியூபில் பார்வையிட்டனர். அத்துடன், நயன்தாராவின் டோரா படத்தின் டீசர் தற்போது அந்த சாதனையை முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Response