இனி இதெல்லாம் நடக்கிற காரியமா என சிலவற்றை பட்டியல் போட்டால் அதில் விஜய்-அஜித் மட்டுமல்ல, சிம்பு-தனுஷ் இருவரும் இணைந்து நடிப்பது கூட சாத்தியமில்லாத ஒன்றாகத்தான் இருக்கும்.. ஆனால் இவர்கள் இருவரையும் இணைக்கும் முயற்சி ஒன்றை அறிமுக இயக்குனர் ஒருவர் வித்தியாசமான முறையில் செய்துள்ளார்.
அதாவது முற்றிலும் புதுமுகங்கள் நடிப்பில் தயாராகி வரும் படம் ஒன்றுக்கு ‘காதலில் சிம்புவும் தனுசும்‘ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் லோகேஷ், ராஜா என்ற இரு புதுமுங்கள் சிம்பு, தனுஷ் பெயரில் நடிக்கின்றனர். .மேலும், சிம்பு மற்றும் தனுஷின் அதிரடி பஞ்ச் டயலாக்குகளையும் இப்படத்தில் பயன்படுத்தி வருகின்றனர். இதைப்பற்றி கேள்விப்பட்ட சிம்பு, டைட்டிலுக்கு எதிர்ப்பு தெரிவிக்காததுடன், அந்தப்படத்தில் ஒரு பாடலையும் பாடித்தருவதாக சொல்லிவிட்டாராம்.. இனி தனுஷ் என்ன சொல்லப்போகிறாரோ என்றுதான் தெரியவில்லை..


