
‘போடா போடி’ என்கிற படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் விக்னேஷ் சிவன் ரசிகர்களை ஓரளவு கவனிக்க வைத்தாலும், அவரது திறமை குடத்தினுள் இட்ட விளக்காய் பிரகாசிக்க முடியாமல் இருந்தது. அதன்பின் விஜய்சேதுபதி, நயன்தாராவை இணைத்து அவரது இயக்கத்தில் வெளியான ‘நானும் ரவுடி தான்’படம் அவரை திறமையான இயக்குனராக பறைசாற்றியது..
ஆனாலும் இந்த திரையுலகம் யாராவது ஒரு முன்னணி நடிகரை வைத்து ஹிட் கொடுத்தால் தானே அவர்களை முன்னணி இயக்குனராக அங்கீகரிக்கும். அந்த வாய்ப்பும் இப்போது சூர்யா மூலமாக விக்னேஷ் சிவனுக்கு கிடைத்துள்ளது. ஆம் சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குகிறார் விக்னேஷ் சிவன்.. இசையமைக்கிறார் அனிருத்.


