‘உள்குத்து’ எதுவும் இல்லாமல் தயாரிப்பாளர் மெச்சும் நாயகன் ஆனார் ‘அட்டகத்தி’ தினேஷ்..!


ஒரு தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் ஒரு ஹீரோ நடிக்கிறார் என்றால் ஆச்சர்யப்பட தேவையில்லை. ஆனால் ஒரே தயாரிப்பாளரின் அடுத்தடுத்த மூன்று படங்களில் ஒரு இளம் ஹீரோ நடிக்கிறார் என்றால் அது ஆச்சர்யம் தான். அவர் வேறு யாருமல்ல.. அட்டகத்தி தினேஷ் தான். அந்த தயாரிப்பளார் கெனன்யா பிலிம்ஸ் செல்வகுமார்..

இவர்கள் தயாரித்த முதல் படமான ‘திருடன் போலீஸ்’, இரண்டாவது படமான ‘ஒருநாள் கூத்து’, தற்போது விரைவில் வெளியாக இருக்கும் அட்டகத்தி என மூன்று படங்களில் தொடர்ந்து நடித்துவரும் அட்டகத்தி தினேஷ், முந்தைய இரண்டு படங்களில் டீசன்டான வெற்றியை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருடன் போலீஸ் வெற்றிப்பட டீமான இயக்குனர் கார்த்திக்ராஜு, தினேஷ், பாலசரவணன் ஆகியோர் இந்த ‘உள்குத்து’வுக்காக மீண்டும் இணைந்துள்ளார்கள். கதாநாயகியாக அட்டகத்தி நந்திதா நடிக்க, ஜஸ்டின் பிரபாகரன் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Leave a Response