ரஜினியின் இன்னொரு பெயரில் நடிக்கிறார் மா.கா.பா.ஆனந்த்

ரஜினியின் பகழ்பெற்ற படமான பாட்ஷா பல்வேறு வகையில் சினிமாவுக்குள் பேசப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அப்படத்தின் புகழ்பெற்ற வசனமான, எனக்கு இன்னொரு பேர் இருக்கு. அந்தப்பெயரில் ஒரு படம் வெளியாகவிருக்கிறது.

அந்த இன்னொரு பெயர் மாணிக்கம் என்கிற மாணிக். அந்தப்பெயரில் தயாராகும் படத்தில் நடிக்கவிருக்கிறார் வல்லவராயன்’, ‘நவரச திலகம்’, ‘அட்டி’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த மா.கா.பா.ஆனந்த். இவர் சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து நடிகராக மாறியவர். இவர் தற்போது மார்ட்டின் என்பவர் இயக்கும் ‘மாணிக்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று வெளியானது. பாட்ஷா படத்தில் ரஜினி மாணிக் பாட்ஷாவாக இருக்கும் கெட்டப்பில் மா.கா.பா.ஆனந்த் அமர்ந்திருக்கும்படி அந்த போஸ்டரை வடிவமைத்துள்ளனர். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ‘எதிர்நீச்சல்’ படத்தில் நடித்த சுஜா குமார் நடிக்கிறார்.
மோஹிதா சினி டாக்கீஸ் சார்பில் எம்.சுப்பிரமணியம், வினோத் இருவரும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு எம்.ஆர்.பழனிகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். தரண் இசை அமைக்கிறார். இப்படத்தின் பூஜை, ஜூன் 16 அன்று காலை 8 மணிக்கு ஏ.வி.எம்.பிள்ளையார் கோயிலில் நடைபெற்றது.

தொடக்கவிழாவில் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Response