
திருச்சி சித்திரவதை முகாமான சிறப்பு முகாமில் 5 ஈழத் தமிழர்கள் 13.06.2016 தொடக்கம் தமது விடுதலைக்காக பட்டினி போராட்டத்தை தொடங்கி உள்ளனர். அவர்கள் பற்றிய விபரங்கள் வருமாறு:
(1) இலங்கை நாதன் S/o பவுல் வயது 46 பிடிக்கப்பட்ட நாள் 12/6/2008 ஒரே கேசுக்காக 4 முறை ஜாமீனில் கோர்ட் மூலமா வெளியே வந்தும் “Q” பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 8 வருடங்களுக்கு மேல் சிறை வாழ்வினை கழித்துள்ளார்.
(2) ஜெயதரன் S/o தம்பாபிள்ளை வயது 30 பிடிக்கப்பட்டது 21/3/2014 ஜாமீனில் விடப்பட்டர் 2.வருடங்களுக்கு மேல் சிறையில் வாழ்கிறார்.
(3) ஆனந்தன் S/o அந்தோனி வயது 45 பிடிக்கப்பட்ட நாள் 12/12/2014 ஜாமீனில் வந்தவர் 1அரை வருடங்களாக சிறை வாசம்.
(4) ராஜேந்திரன் S/o கனேஸ் வயது 28 பிடிக்கப்பட்டது 8/8/2014 அன்று . 2 வருடங்ளாக சிறை
(5) யுகப்பிரியன் S/o செல்வரத்தினம் வயது 29 பிடிக்கப்பட்டது 28/7/2014 2.வருடம். சிறை அடைக்க பட்டதால் பல முறை தன் விடுதலைக்காக அதிகாரிகளுடன் பேசியதில் அவர்கள் இவரின் கோரிக்கையை ஏற்க மறுத்ததால் மனநிலை பாதிக்க பட்டு பல முறை தற்கொலை முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிட தக்கது.
இவர்கள் அனைவரும் ஜாமீனில் விடப்பட்டவர்களை (q)பிரிவு அதிகாரிகள் சிறை வாசலில் வைத்து மீண்டும் சந்தேகத்தின். பெயரில் கைது பண்ணி திருச்சி சிறப்பு (வதை முகாமில்) காலவரையற்ற நிலையில் குடும்பத்தை பிரித்து தடுத்து வைத்து உள்ளனர்(குறிப்பு) நாதன் என்பவர் 4 முறை ஜாமீனில் விடப்பட்டவர்.


