கட்டுக்கட்டாகப் பணம் சிக்கிய நீதிபதிக்குப் பதவி – ஆம் ஆத்மியை வீழ்த்தியதற்கு பரிசு?

தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் யஷ்வந்த் வர்மா. கடந்த மாதம் இவரது வீட்டின் உள்ளே பாதி எரிந்த நிலையில் கட்டுக்கட்டாகப் பணம் கைப்பற்றப்பட்டது.இந்நிகழ்வு ஒன்றியம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது

பிப்ரவரி 2023: மனிஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீது டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணை. ஜாமீன் நிராகரிக்கப்பட்டது.

மார்ச் 2024: அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு முன்பாக, அவரது இடைக்கால நிவாரண மனு மீதான விசாரணை நீதிபதி யஷ்வந்த் வர்மா பெஞ்சில் நிராகரிக்கப்பட்டது.

ஜூலை 2024: மனிஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான மற்றொரு விசாரணை ஜஸ்டிஸ் வர்மாவின் பெஞ்சில் நிராகரிப்பு.

பின்னர் உச்சநீதிமன்றத்தில் இருந்து ஜாமீன் பெற்ற இந்த நீதிபதிகளின் பெஞ்சில் சஞ்சய் சிங்கின் ஜாமீன் மனுவும் நிராகரிக்கப்பட்டது.

இன்று அவர்  வீட்டில் இவ்வளவு ரூபாய் நோட்டு கிடைத்தது ஆனால் நடவடிக்கை என்ற பெயரில் டிரான்ஸ்பர் மட்டுமே.
அனைத்து காலவரிசைகளையும் புரிந்துகொள்ளுங்கள்.

நீதிபதிகள் எப்படி உபயோகப்படுத்தப்படுகிறார்கள் என்று பாருங்கள் என்கிற விமர்சனங்கள் வந்தன.

இந்நிலையில், இதுகுறித்து உள் விசாரணை நடத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா உத்தரவிட்டார்.

இந்த விவகாரம் பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்தது.

அதை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர். இதற்கிடையில் நீதிபதி வர்மாவை அலகாபாத் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் நீதிபதி யஷ்வந்த் வர்மா நேற்று அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்.அவருக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அருண்பன்சாலி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதற்குக் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

வழக்கறிஞர்களுக்கு தெரியாமல் பதவிபிரமாண நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் விக்ரந்த்பாண்டே,‘‘நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவியேற்பு குறித்து உயர் நீதிமன்றத்திடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை. எங்களுக்குத் தெரியாமல் நீதிபதி வர்மாவுக்கு பதவிபிரமாணம் செய்து வைத்த விதத்தைக் கண்டிக்கிறோம்” என்றார்.

அதேநேரம், நீதிபதி வர்மாவுக்கு பதவிபிரமாணம் நடந்தாலும் அவருக்கு எதிராக விசாரணை நடந்து வருவதால் தற்போது அவருக்கு நீதிமன்றப் பணிகள் எதுவும் ஒதுக்கப்படமாட்டாது.கடந்த வாரம், நீதிபதி வர்மாவுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மூன்று பேர் கொண்ட குழு இந்த விவகாரத்தை விசாரித்து வருவதாகவும், விசாரணை முடிந்த பிறகு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Leave a Response