
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி நடந்தது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் 1 இலட்சத்து 11 ஆயிரத்து 25 ஆண் வாக்காளர்கள், 1 இலட்சத்து 16 ஆயிரத்து 497 பெண் வாக்காளர்கள், 25 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 2 இலட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்கள் உள்ளனர். இடைத்தேர்தலில், 82 ஆயிரத்து 138 ஆண் வாக்காளர்களும், 88 ஆயிரத்து 37 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் 17 பேர் என மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர் வாக்களித்தனர். வாக்குப்பதிவு சதவீதம் 74.79.
தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது.
மொத்தம் 15 சுற்றுகளாக எண்ணப்பட்டன.
இந்தத் தேர்தலில் காங்கிரசு வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 1,10,556 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,981 வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் 10804 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 1,031 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
இதன்படி, காங்கிரசு வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவர்களில் அதிமுக வேட்பாளர் தவிர மற்ற அனைவரும் கட்டுத்தொகையை இழந்தனர்.


