சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மான விசயத்தில் பதுங்கியது ஏன்? – ஸ்டாலின் விளக்கம்

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 28 ஆம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளில், மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து, வரும் திங்கட்கிழமை அவை மீண்டும் கூடும் என்று சபாநாயகர் தனபால் அறிவித்தார்.

இதனால் சபாநாயகர் தனபாலுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம், ஜூலை 1 ஆம் தேதி எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வலியுறுத்தப் போவதில்லை என்று தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் கூறினார்.

இதுபற்றி அவர் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எடுத்துக்கொள்ளத் தேவையில்லை என்று சபாநாயகர் தனபாலிடம் கடிதம் கொடுத்துள்ளோம்.

அன்றைய சூழலில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர கடிதம் கொடுத்தோம். இப்போதைக்கு அதை வலியுறுத்தப் போவதில்லை என்றார்.

இந்நிலையில், மு.க. ஸ்டாலின் இன்று கூறும்பொழுது,…

மூன்று சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியைப் பறிக்கக் கூடாது என்பதால் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நாங்கள் திரும்பப் பெற்றோம். சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொடுத்துவிட்டு, தி.மு.க. பதுங்குவதாக சிலர் கூறுகின்றனர். ஆனால், புலி பதுங்குவது பாய்வதற்குதான். பாயவேண்டிய நேரத்தில் பாயும்

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Leave a Response