
ஷங்கர் டைரக்சனில் லைக்கா நிறுவனம் தயரிப்பில் ரஜினி நடித்துள்ள 2.O’ படம் முழுக்க முழுக்க 3டியில் தயாராகி வருகிறது. கடந்த இரண்டு வருடங்களாக இந்தப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்தப்படம் ஆரம்பித்த பின்னார்தான் ரஜினியின் கபாலி ஆரம்பிக்கப்பட்டு ரிலீசாகி, தற்போது அவரது இன்னொரு படமான ‘காலா’ படமும் துவங்கப்பட்டு அதுவும் கூட நிறைவுப்பகுதியை எட்டியுள்ளது.
இந்த நிலையில் 2.O படத்தின் இசை வெளியீடு விழா துபாயில் வரும் அக்டோபர் 27ம் தேதி வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது. 2.O படத்தின் இசை வெளியீடு burj parkல் நடைபெறுகிறது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 125 சிம்போனி கலைஞர்களுடன் இணைந்து இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளார்.
முதன் முறையாக இந்த இடத்தில் இப்படிப்பட்ட நிகழ்வு நடத்த துபாய் அரசாங்கம் உத்தரவு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மிக முக்கியமான அம்சமாக துபாய் அரசர் இந்தப் பிரம்மாண்ட நிகழ்வில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் 12000 பேர் இந்நிகழ்ச்சியைப் பார்க்க இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. துபாயில் உள்ள பெரிய மால்களில் ரூபாய் 2 கோடி செலவில் பிரம்மாண்ட LED போடப்பட்டு இந்நிகழ்ச்சியை நேரலையாகக் காண்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒன்றறை லட்சம் பேர் பார்க்கக்கூடும் என்ற கூறப்படுகிறது.


