மீண்டும் ஓவியாவா? வேறு முன்னணி நடிகையா? – பிக்பாஸ் குழு தீவிர வேட்டை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓவியா, அங்கு நடிகர் ஆரவ்வுடன் நெருக்கமாகப் பழகினார். ஒரு கட்டத்தில் அவரைக் காதலிக்க ஆரம்பித்தார். ஆரவ்விடம் தனது காதலை ஓவியா வெளிப்படுத்தினார். ஆனால் அவருடைய காதலை ஆரவ் ஏற்கவில்லை. நட்பாகப் பழகியதாகச் சொல்லி விலகினார். காதல் தோல்வியால் ஓவியா மன அழுத்தத்துக்கு ஆளாகிக் கண்ணீர் விட்டு அழுதார். நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கும் முயன்றார்.

மனோதத்துவ நிபுணர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். அதன்பின், கமல் எவ்வளவோ சொல்லியும் ஓவியா போட்டியில் பங்கேற்க மறுத்து நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். இதனால், பிக்பாஸ் பார்ப்போர் எண்ணிக்கை பாதியாகக் குறைந்தது.

இதனால், மீண்டும் பிக்பாஸ் பழைய வரவேற்பைப் பெற முன்னணி கதாநாயகி ஒருவரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகின்றதாம்.

அவர் ஆகஸ்ட் 15-ம் தேதி வருவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இன்னொரு பக்கம், ஓவியாவையே மீண்டும் கொண்டுவர பேச்சு வார்த்தை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Response