கமல் முன்னால் ஓவியாவைத் தவிர எல்லோரும் நடிக்கிறார்கள்


கமல் முன்னால் ஓவியாவைத் தவிர எல்லோரும் நடிக்கிறார்கள் என்பது கமலுக்குத் தெரிகிறதோ இல்லையோ பார்க்கிற மக்களுக்குக் கண்டிப்பாகத் தெரிகிறது‬.
‪ஒவியா பெரும்பாலும் ஷாட்ஸோடு இருப்பதால்தான் அவளுக்குப் பேராதரவு என நமீதா காயத்ரிபோல் எண்ணி நிறைய ஜூலிகள் ஜட்டியோடு திரியப்போகிறார்கள‬. பைபோலர் என கமலிடம் ஓவியா தன்னை சொல்லிக்கொண்டது சுய எள்ளல் இல்லை. எல்லா ஃபுட்டேஜையும் பாக்கறேன்னு சொல்லிட்டு மொக்கையாட்டாம் என்னை கேள்வி கேட்டுக்கிட்டு இருக்கே போயா பொக்கெ என்கிற எள்ளலே. ‪பெரும்பான்மையின் பிரதிநிதிகளாக கமல் எதிரிலிருக்கும் சிறு கூட்டம், நீ சிரித்தாலும் அழுதாலும் உன்னோடு நாங்கள் இருக்கிறோம் என ஓவியாவுக்கு அனுப்பும் பேரொலியின் சமிக்கை புரியாதது போலவும் அவளை தனிமைப் படுத்தாமல் சுமுகமாய் இருக்கிற கனவான் கனவாட்டிகள் போலவும் வார இறுதிகளில் நடித்துக் கொண்டிருக்கிறது பிக் பாஸின் களவானிக் குடும்பம்

Leave a Response