ஓவியான்னா அவ்வளவு எளக்காரமாடா?


உதயமானது அகிலஇந்திய ஓவியா பேரவை ஆயிரம் பேருக்கு அன்னதான திட்டம்!

ஓவியா பாசத்தின் உச்சகட்டமாக தர்மபுரி மாவட்டத்தில் தமிழரசன் என்பவர் ‘அகில இந்திய ஓவியா பேரவை’ என்ற பெயரில் ஓவியாவுக்கு பேரவை ஆரம்பித்து அதகளப்படுத்தியுள்ளார்.

ஃப்ளக்ஸ் அடித்து…
பேரவை ஆரம்பித்தது மட்டுமல்லாமல் தர்மபுரியில் ஓவியாவுக்கு ஓட்டுகேட்டு பிரசாரமெல்லாம் செய்திருக்கிறது தமிழரசன் குரூப்.

இந்நிகழ்வு சமூக ஆர்வலர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. பேராசிரியர் ராஜநாயகம் இந்நிகழ்வை எள்ளல் செய்து எழுதியிருக்கும் பதிவில்…..

அது என்னாங்க(டா), எங்க ஓவியா-னா ஒங்களுக்கு அவ்வளவு எளக்காரமா?
ஒலக நாயகனுக்கு ஈக்குவலா நடிக்கிற ஒலக நாயகி ஓவியாவுக்கு,
வெறுமனே ‘அகில இந்திய ஒவியா பேரவை’னு பேரவச்சு கேவலப்படுத்துறீங்க?
‘அகில உலக, உலக நாயகி, பிக் பாஸ் ஓவியா பேரவை’னு ஒடனே பேர மாத்துங்க(டா)…

இந்த கதிராமங்கலம், நெடுவாசல்னு எங்கயோ உண்ணாவிரதம், பட்டினினு கெடக்காங்கலாமே…
அங்க வருது(டா) எங்க ஓவியாவோட அன்னதான படை!

Leave a Response