பா.ரஞ்சித்தின் பக்குவம் ஷங்கரிடம் இல்லையா..?


எந்த மொழி சினிமாவானாலும் அதன் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படப்பிடிப்பு தளங்களில் இருந்து அவ்வப்போது படத்தின் புகைப்படங்கள் திருட்டுத்தனமாக வெளியாவது வாடிக்கைதான். எவ்வளவுதான் பாதுகாப்பு போட்டாலும் வெளிப்புற படப்பிடிப்பில் ரசிகர்கள் தங்களது அதிகப்படியான ஆர்வத்தால் புகைப்படங்கள் எடுத்து அதை பரப்புவதும் வழக்கமான ஒன்று தான்.

ஷங்கர் டைரக்சனில் ரஜினி நடித்துவரும் ‘2.O’ படத்தில் ரஜினி மற்றும் எமி ஜாக்சன் ஆகியோரின் புகைப்படங்கள் சமீபத்தில் திருட்டுத்தனமாக லீக்காகின.. இதனால் படக்குழுவினர் மீதும் பாதுகாப்பு நபர்கள் மீதும் இயக்குனர் ஷங்கர் கோபத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஆனால் அதே ரஜினி, இன்னொரு இயக்குனரான பா.ரஞ்சித்தின் டைரக்சனில் தற்போது நடித்துவரும் ‘காலா’ படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் ரஜினியின் கெட்டப் போன்றவை அதிகாரப்பூர்வமாகவே வெளியாகி இருக்கின்றன.. படத்தின் ஸ்டில்கள் வெளியாவதால் படத்திற்கு பப்ளிசிட்டியே தவிர படத்தின் கதை மீதான சஸ்பென்ஸ்க்கு எந்த பாதிப்பும் வராது என்பது பா.ரஞ்சித்தின் எண்ணம்.. கபாலி படத்தின் படப்பிடிப்பு சமயத்திலும் கூட இதுபோலத்தான் நிகழ்ந்தது.. அதனால் படத்திற்கு எந்த பாதிப்பும் இல்லையே.

ஆனால் இரண்டு ஸ்டில்கள் வெளியாகிவிட்டதாலேயே மொத்தப்படத்தின் கதையும் வெளியே கசிந்துவிட்டது போல இயக்குனர் ஷங்கர் கோபப்படுவதில் அர்த்தமே இல்லை.. அப்படி என்றால் பா.ரஞ்சித்திடம் இருக்கும் பக்குவம் இத்தனை வருடங்களாக படம் இயக்கிவரும் ஷங்கரிடம் இல்லாமல் போனது ஏன் என கேள்வி எழுப்புகிறார்கள் ரஜினி ரசிகர்கள்..

Leave a Response