மதுரை தொடர்வண்டிக் கோட்ட மேலாளராக ஒரு மலையாளப்பெண் – தமிழர்கள் அதிர்ச்சி

மதுரை தொடர்வண்டிக் கோட்டத்தின் மேலாளராகப் பணியாற்றிய சுனில்கர்க் டெல்லிக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து மேலாளராக கேரளாவைச் சேர்ந்த நீனு இட்டாரா பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர், சென்னைக் கோட்டத்தில் வர்த்தகப் பிரிவில் முதன்மை மேலாளராகப் பணியாற்றியவர் நீனு இட்டாரா.
மதுரை கோட்ட மேலாளராக திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

மதுரை தொடர்வண்டிக் கோட்டத்தின் மேலாளராக பொறுப்பில் அமரும் முதல் பெண் இவராவார்.

இவர், கடந்த 1988 இல் இந்திய தொடர்வண்டித் துறையில் பணியில் சேர்ந்தார். தொடர்வண்டி வர்த்தகப்பிரிவு, போக்குவரத்து பிரிவுகளில் பணியாற்றியவர்.

சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரைக் கோட்டத்துக்கு ஒரு மலையாளப் பெண்மணி பொறுப்பேற்றிருக்கிறார். இனிமேல், அங்கு வேலைவாய்ப்பில் மலையாளிகள் முன்னுரிமை பெறுவார்கள். இதனால் தமிழ் தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்திருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிரது.

Leave a Response