
இசையமைப்பாளர் ஒருவரை அறிமுகப்படுத்தி அவருடன் எந்தவித மனக்கசப்புமின்ரி 25 வருடங்கள் ஒன்றாக பயணிப்பது என்பது மிகப்பெரிய சாதனைதான்.. ஆனால் மணிரத்னமும் ஏ.ஆர்.ரகுமானும் கலையை மட்டுமே நேசிப்பவர்கள் என்பதால் இந்த ஒற்றுமை பயணம் சாத்தியமாகி உள்ளது என அடித்து சொல்லலாம்..
இதுபற்றி மணிரத்னம் சமீபத்தில் பேச்சுவாக்கில் கூறிய ஒரு செய்தியை கவனித்தாலே இவர்களது நட்பிற்கு அடிப்படை எது என்று புரிய வரும்.. “25 வருடங்களாக நானும் ரகுமானும் ஒன்றாக பயணித்து வருகிறோம். ஒவ்வொரு முறை ஏ.ஆர்.ரகுமானுடன் இணைந்து வேலை செய்வதும் புதிய அனுபவமாகும். நான் அவரிடம் நாளை படபிடிப்பு உள்ளது பாடல் வேண்டும் என்று கேட்டுவிட்டு அவரை பாடலுக்காக சந்திக்க சென்றால் அவர் தீம் மியூசிக் ரெடி செய்து வைத்திருப்பார்.
ஆனால் அந்த தீம் மியூசிக்கை கேட்டதும் சந்தோஷத்தில் நம் மனம் மாறி தீம் மியூசிக்கை ரசிக்க ஆரம்பித்துவிடும். என் ஒவ்வொரு படத்துக்கும் தேவையான இசையை தேடி பிடித்து கொடுப்பவர் அவர். அடுத்த படத்திலும் ஏ.ஆர்.ரகுமான் இசையில் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்’’ என்றார் இயக்குநர் மணிரத்னம்.


