இந்திய அரசின் திட்டப்பெயர்களை வங்காளத்தில் மொழிமாற்றம் செய்வோம் – மம்தா அதிரடி

ராஷ்ட்ரிய கிரிஷி விகாஷ் யோஜனா,பிரதம மந்தரி பசல் பீமா யோஜனா. இவை இந்திய ஒன்றியம் முழுமைக்குமான மோடி அரசின் திட்டங்கள்.

இவற்றில் ராஷ்ட்ரிய கிரிஷி விகாஷ் யோஜனா என்றால்,தேசிய வேளாண் மேம்பாட்டுத்திட்டம் என்று பொருள்.
பிரதம மந்தரி பசல் பீமா யோஜனா என்றால்,பிரதமரின் பயிர்காப்பீட்டுத் திட்டம் என்று பொருள்.இவை மட்டுமின்றி, வங்கிக் கணக்கு முதல் அஞ்சலகக் கணக்கு வரை இந்தி மொழியில் தான் பெயர் வைக்கிறது.

மோடி பதவியேற்றதிலிருந்தே மத்திய அரசின் திட்டங்களுக்கு இந்தி அல்லது சமக்கிருதத்தில்தான் பெயர் வைக்கின்றனர். அதை இந்தியா முழுக்க விளம்பரம் செய்கின்றனர்.

இதைக் கடுமையாக எதிர்த்து இருக்கும் மேற்குவங்க முதல்வர் மம்தாபானர்ஜி, எதிர்த்ததோடு நில்லாமல், இந்திய அரசு திட்டங்களின் பெயர்கள் அனைத்தும் இனி வங்காள மொழியில் பெயர் மாற்றம் செய்யப்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

வங்காள அரசு இந்திய திட்டப் பெயர்களை வங்காள மொழியில் மாற்றம் செய்து மக்களிடம் கொண்டு செல்வோம் என அறிவித்துள்ளது வங்காளிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழக அரசும் இதையே பின்பற்றி இந்திய திட்டப் பெயர்களுக்கு் தமிழ்ப் பெயர் சூட்ட முன் வரவேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.

Leave a Response