இளையராஜாவை நோக்கி வினா எழுப்புகிற உரிமை கங்கைஅமரனுக்கு இல்லை – கொதிக்கும் இணையம்

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு இளையராஜா காப்புரிமை அடிப்படையில் அறிவிப்புச் செய்ததைத் தொடர்ந்து நிறைய விவாதங்கள். அது பற்றிக் கருத்துத் தெரிவித்த இளையராஜாவின் சகோதரர் கங்கைஅமரன், இளையராஜா செய்தது தப்பு என்று சொல்லியிருந்தார். அதனால் கங்கைஅமரன் மீதும் விமர்சனங்கள் வரத்தொடங்கியிருக்கின்றன.

தமிழ் அலை பதிப்பகம் கவிஞர் இசாக், இதுபற்றி எழுதியுள்ள பதிவில்,

ஒரு சமூகத்தின் வாழ்கிற உரிமையையும் அடிப்படை உரிமையையும் மறுக்கிற பா.ஜ.க.வின் கூடாரத்தில் நின்று கொண்டு இசையமைப்பாளர் இளையராஜாவை நோக்கி வினா எழுப்புகிற தகுதி கங்கை அமரனுக்கு இல்லை.

தன் சிறுதாவூர் பங்களாவுக்காக பாஜக எனும் அரசியல் அசிங்கத்தை கையில் எடுத்ததோடு, மக்களுக்காக எந்த களப்பணியிலும் ஈடுபடாமல் ஆர்கே நகர் மக்களிடம் ஓட்டுப் பிச்சை கேட்கப் போகிற மானமற்ற கங்கைஅமரனுக்கு இளையராஜாவை விமர்சிக்கிற தகுதி இல்லை.

இளையராஜாவின் செயல்களில் பல விமர்சனம் இருக்கலாம். ஆனால் பாவலரின் தம்பி என சொல்லிக் கொள்கிற தார்மீக உரிமையையும் இழந்த கங்கை அமரன் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இளையராஜாவுக்கும் எஸ்பிபி க்கும் நடைபெறுவது வணிக பிரச்னை.

ஞாயம் பேசுகிற தகுதி அமர் சிங் என்கிற அமரருக்கு இல்லை.

Leave a Response