ஆர்ட் டைரக்டர் கிரண் நடிகரானது இதனால் தான்..!


இயக்குனர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், ஆர்ட் டைரக்டர்கள் தங்களது பணியை தாண்டி நடிகர்களாகவும் தங்களை மக்களிடம் காட்டி வருகிறார்கள். ’அனேகன்’, ‘கவண்’, ‘கோ’, ‘குப்பி’ உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு ஆர்ட் டைரக்டராக பணியாற்றியிருப்பவர் கிரண். இவர் சமீபத்தில் வெளியான எமன் படத்தில் ஏரியா கவுன்சிலராக நடித்திருந்தார்.. நடிகராகவும் அவதாரம் எடுத்தது ஏன் என்பதற்கு விளக்கம் கூறியுள்ளார் கிரண்..

“முன்பெல்லாம் ஒரு படத்தில் அரங்குகள் பளிச்சென தெரியும்படி இருக்கும். இப்போதெல்லாம் அரங்கம் அமைத்ததே தெரியாதளவுக்கு தத்ரூபமாக அமைக்க வேண்டி உள்ளது. ஆர்ட் டெக்னீஷியன்கள்கள் உழைப்பு வெளியே தெரிவதில்லை. அதனால் ஆர்ட் டைரக்டர் பெயர் வெளியில் வருவதில்லை. இந்த காரணத்தால்தான் நான் உள்பட பல்வேறு டெக்னீஷியன்கள் நடிகர்களாக மாறுகின்றோம்’ என்று ஆர்ட் டைரக்டர் கிரண் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். .

Leave a Response