
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ‘பாகுபலி’ படம் நிகழ்த்திய சரித்திர சாதனை பற்றி சொல்லித்தெரிய வேண்டியதில்லை.. அதனாலேயே பாகுபலி-2’வுக்கான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்து இருப்பதும் உண்மை.. இந்தியாவில் அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள பாகுபலி-2 திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது.
தற்போது இந்த படத்திற்காக கிராபிக்ஸ் வேலைகள்,உலகம் முழுவதும் உள்ள பல முன்னணி ஸ்டூடியோக்களில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சிவராத்திரியை முன்னிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு தீனி போடும் வகையில்,பாகுபலி-2 படத்தின் புதிய மோஷன் போஸ்டரை இயக்குநர் ராஜ மெளலி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தெலுங்கு மட்டுமல்லாது,பாகுபலி-2 படம் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட உள்ள அனைத்து மொழிகளிலும் இந்த புதிய மோஷன் போஸ்டரை ராஜமெளலி வெளியிட்டுள்ளார். யானை துதிக்கையின் மேல் பிரபாஸ் கம்பீரமாக ஏறி நிற்கும் காட்சி பார்ப்பதற்கே மிரட்டலாக இருக்கிறது.


