“அஜித் அண்ணா ரொம்ப நல்லா பார்த்துக்கிறார்” ; பாலிவுட் நடிகர் பரவசம்..!


வீரம், வேதாளம் படங்களை தொடர்ந்து அஜித் இயக்குனர் சிவா மூன்றாவதாக இணைந்திருக்கும் படம் தான் விவேகம்.. படத்துக்குப்படம் அஜித்துடன் மோதி வில்லத்தனம் காட்டுவதற்கு புதுப்புது ஆட்களாக, அதுவும் மாஸ் நடிகர்களாக உள்ளே இழுத்தால் தான் படத்திற்கு வரவேற்பு கிடைக்கும் என்பதால் பாலிவூட் நடிகரான விவேக் ஓபராயை இந்தப்படத்தின் வில்லனாக்கி விட்டார் இயக்குனர் சிவா…

தமிழ்சினிமாவை பற்றியும் அஜித்தை பற்றியும் செய்திகள் வாயிலாக கேள்விப்பட்டிருந்த விவேக் ஓபராய், ஷூட்டிங்ஸ்பாட்டில் அஜித் நடந்துகொண்ட விதத்தை பார்த்து அசந்துபோய் விட்டாராம். “அஜித் அண்ணா ரொம்ப பணிவானவர், அன்பானவர், அக்கறை கொண்டவர்.. அவருதன் இருந்த தருணங்கள் அற்புதமானவை” என சிலாகித்து கூறியுள்ளார் விவேக் ஓபராய்.

Leave a Response