தேனாண்டாள் பிலிம்சுக்காக சுந்தர்.சி இயக்கும் சங்கமித்ரா சரித்திர படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து நடிக்க இருக்கிறார் ஆர்யா… என்றாலும் அந்தப்படத்திற்காக ஓன்றரை ஆண்டு கால்சீட் கொடுத்திருப்பதால் அப்படத்தில் நடிப்பதற்கு முன்பே அமீர் இயக்கும் சந்தனதேவன் படத்தில் தான் நடிக்க வேண்டிய காட்சிகளில் நடித்து கொடுத்து விட இருக்கிறாராம் ஆர்யா.
தற்போது மஞ்சப்பை’ ராகவா இயக்கத்தில் ‘கடம்பன்’ படத்தில் நடித்து வரும் ‘கடம்பன்’ பட வேலைகளை முடித்து விட்டதால், பொங்கல் முடிந்து சில தினங்களில் ஆர்யா உள்ளிட்ட நடிகர்- நடிகையர் உள்ளிட்ட யூனிட்டுடன் ‘சந்தன தேவன்’ படத்திற்காக தேனியில் முகாமிடுகிறார் இயக்குனர் அமீர்.