தமிழில் ஸ்திரமான இடத்தை பிடிக்கும் முயற்சியில் ஸ்ரத்தா ஸ்ரீநாத்..!


மணிரத்னம் இயக்கிவரும் ‘காற்று வெளியிடை’ படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் சொந்த ஊர் பெங்களூர். ஆனால் ‘கோகினூர்’ என்ற மலையாள படம் மூலம் அறிமுகமானார். பின்னர் கன்னட படங்களில் நடித்து பிரபலமானார். அதையடுத்து ஸ்ரத்தா ஸ்ரீநாத் தமிழ் படத்துக்காக காத்திருந்தபோது மணிரத்னம் படத்தில் ‘காற்று வெளியிடை’ படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்க வாய்ப்பு வந்தது. இந்தப்படத்தில் நடிக்கும்போதே சில தமிழ்ப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு வந்தது. இதனால் தமிழில் பிஸியாக தொடங்கிவிட்டார்.

ஆர்.கண்ணன் இயக்கத்தில் கௌதம் கார்த்தி நடித்துள்ள ‘இவன் தந்திரன்‘ படத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் நாயகியாக நடித்துள்ளார். மேலும் நிவின்பாலி, நட்டி நடராஜன் இணைந்து நடித்துள்ள ‘இவர்கள்’ மற்றும் மாதவன், விஜய்சேதுபதி நடித்துவரும் ‘விக்ரம் வேதா’ ஆகிய படங்களிலும் ஸ்ரத்தா நடித்து வருகிறார். ஒரே நேரத்தில் சொல்லப்போனால் நான்கு தமிழ் படங்களில் நடித்து வருகிறார் ஸ்ரத்தா ஸ்ரீநாத். மேலும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க முயற்சி செய்து வருகிறார். ஆக இனிவரும் வருடங்களில் தமிழ்சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாக இவர் ஆவார் என்பது உறுதியாக தெரிகிறது.

Leave a Response