ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27 அன்று நடைபெறவுள்ளது.
இதனால் அனைத்து அரசியல்கட்சிகளும் தீவிர பரப்புரை மேற்கொண்டுவருகின்றன.
இந்நிலையில், களத்தில் இருக்கும் நாம்தமிழர்கட்சிக்கு ஆதரவாக இயக்குதர் அமீர் படத்தின் பாடல் வெளியாகியுள்ளது.
இப்பாடலை வெளியிட்ட சீமான்,
இம்மண்ணையும் மக்களையும் நேசித்து திரைத்துறையில் இயங்குபவர்களான என் ஆருயிர் தம்பி ஆதம்பாவா தயாரித்து, எழுதி, இயக்கி, ஆருயிர் இளவல் சுரேஷ் காமாட்சி வெளியிடும், என் உயிர்த்தம்பி இயக்குனர் அமீர் நடிக்கும் “உயிர் தமிழுக்கு” படத்தில் என் நேசத்துக்குரிய இசையமைப்பாளர் வித்யாசாகர் இசைக்கோர்வையில் உருவான “ஓட்டுக் கேட்டு ஓடி வருவான்” பாடலை வெளியிடுவதில் பெரு உவகை கொள்கிறேன்
என்று கூறியுள்ளார்.
அப்பாடல் பார்க்க……..