ஜல்லிக்கட்டுக்கு கமல்-ராஜமௌலி ஆதரவு..!


பொங்கல் நெருங்கி வரும் வேளையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வேண்டும் என்கிற கோஷம் வலுப்பெற துவங்கியுள்ளது. திரையுலகினரும் தங்களது பங்கிற்கு ஜல்லிக்கட்டுக்கு அதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள்.. இந்த சீசனை பொறுத்தவரை முதல் ஆளாக சிம்பு குரல் கொடுக்க, அடுத்ததாக விஜய்சேதுபதி ஆகியோரும் வரிந்துகட்டினார்கள்..

இப்போது வெயிட்டான இடத்தில் இருந்து ‘ஜல்லிக்கட்டு’ நடத்த அனுமதித்தே ஆகவேண்டும் என குரல் எழும்பியுள்ளது. அது வேறு யாருமல்ல.. நமது உலகநாயகன் கமல்ஹாசன் தான். ஜல்லிக்கட்டு’ மாடுகளை சித்திரவதை செய்கிறது என்று கூறினால், பிரியாணி செய்வதையும் தடைவிதிக்க வேண்டியதுதானே என ஆக்ரோஷமாக கூறியுள்ளார் கமல்..

சீனாவைப்போல அல்லாமல், இங்கே காளைகளுக்கு பாதுகாப்புடன் நடத்தப்படும் ஜல்லிகட்டை அனுமதித்தே ஆகவேண்டும் என அவர் கூறியுள்ளார்.. தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது, ஆந்திராவில் இருந்து ‘பாகுபலி’ இயக்குனரான ராஜமவுலி கூட, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கவேண்டும் என்கிற கோரிக்கையை வைத்துள்ளார்.

Leave a Response