விக்ரமால் பிரகாசிக்க தொடங்கிய துருவ நட்சத்திரம்..!


துருவ நட்சத்திரம்’ படத்தை கௌதம் மேனனின் கனவுப்படம் என்று கூட சொல்லலாம். ஆனால் அவரது கனவு நனவாகாமல் போய்விடுமோ என்கிற அச்சம கடந்த இரண்டு வருடங்களாகவே இருந்தது.. காரணம் இந்தக்கதையில் அஜித் நடிப்பதாக இருந்து, பின்னர் அது கைமாறி சூர்யா நடிப்பதாக பூஜையெல்லாம் போடப்பட்டு ரசிகர்களுக்கும் நம்பிக்கை அளிக்கும் விதமாக துவங்கியது..

ஆனால் கௌதம் மேனனின் ஸ்கிரிப்ட் ரெடியாக தாமதமாகவே பொறுமை இழந்த சூர்யா அந்தப்படத்தில் இருந்து விலகினார்.. அதன்பின் என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா என இரண்டு படங்களை ரிலி செய்துவிட்டார் கௌதம் மேனன்..

இப்போது தனுஷை வைத்து இயக்கிவரும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் முடியும் தருவாயில் இருக்கும்போதே மீண்டும் துருவ நட்சத்திரத்தை வெளியில் எடுத்து தூசி தட்டி விக்ரமை ஹீரோவாக வைத்து பூஜையும் போட்டுவிட்டார்.. சால்ட் அன்ட் பெப்பர் லுக்குடன் விக்ரமை பார்க்கும்போதே அசத்தலாக இருக்கிறது.. ஆக விக்ரமால் இந்த ‘துருவ நட்சத்திரம்’ இன்னு அதிகமாகவே பிரகாசிக்கும் என எதிர்பார்க்கலாம்.

Leave a Response