புத்தாண்டில் ஷாங்காயில் இருந்து புறப்பட்ட விமானம் 2016 டிச-31ஆம் தேதி சான் பிரான்சிஸ்கோவை அடைந்த அதிசயம்..


இது எப்படி சாத்தியம் என நினைக்கலாம்.. ஆனால் ஒவ்வொரு நாட்டிற்கும் இடையே மாறுபடும் நேர வித்தியாசம் இதை சாத்தியமாக்குகிறது.. நம் உறவினர்களோ, நண்பர்களோ பலரும் நம்முடன் போனில் பேசும்போது சொல்வதை கவனித்து பார்த்தால் இது தெரியும். அதாவது நமக்கு இங்கே இரவு உணவு ஆரம்பிக்கும் எட்டு மணி தான், பிரான்சில் இருப்பவர்களுக்கு மாலை 3.30 மணி.. கிட்டத்தட்ட நான்கரை மணி நேர வித்தியாசம் (இது குளிர்காலம் என்பதால்.. இதுவே வெயில் காலமாக இருந்தால் மூன்றரை மணி நேரம் மட்டுமே)

இப்படித்தான் சீனாவில் இருக்கும் ஷாங்காய் நகருக்கும் அமெரிக்காவில் இருக்கும் சான் பிரான்சிஸ்கோ நகருக்குமான நேர வித்தியாசம் சுமார் 16 மணி நேரம்.. அதாவது ஷாங்காயில் இன்று இரவு 10 மணி ஆகிவிட்டது என வைத்துக்கொண்டால், அதே தேதியில் சரியாக இதே நேரத்தில் சான் பிரான்சிஸ்கோவில் காலை 6 மணி ஆக இருக்கும். அதாவது அப்போதுதான் பொழுது விடியவே ஆரம்பிக்கும்..

இந்த இரண்டு நகரங்களுக்கு இடையே உள்ள விமான பயண நேரம் கிட்டத்தட்ட 12 மணி நேரம்.. இதில் தான் இந்த புது வருடத்தில் ஓர் அதிசயம் நிகழ்ந்துள்ளது..

அதாவது ஷாங்காயில் இருந்து 2017 ஜன-1ஆம் தேதி கிளம்பிய விமானம் சுமார் 12 மணி நேரம் பயணித்து சான் பிரான்சிஸ்கோவில் இறங்கியபோது அங்கே இன்னும் புத்தாண்டே பிறக்காமல் இருந்தது தான் ஆச்சர்யம்..

இன்னும் புரியும் விதமாக சொல்லவேண்டும் என்றால் ஷாங்காயில் இருந்து 2017 ஜன-1ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு அந்த விமானம் கிளம்பியது என வைத்துக்கொண்டால், அதேநேரம் சான் பிரான்சிஸ்கோவில் 2016 டிச-31ஆம் தேதி காலை 11 மணி தான் ஆகி இருக்கும்..

12 மணி நேரம் பயணித்து சான் பிரான்சிஸ்கோவை அடையும்போது 2016 டிச-31ஆம் தேதி இரவு 11 மணி தான் ஆகி இருக்கும்.. அதாவது அங்கே புது வருடம் அதன்பின் ஒரு மணி நேரம் கழித்து தான் பிறக்கவே ஆரம்பிக்கும்.

இதுதான் தற்போது இந்த விமானப்பயணத்திலும் நிகழ்ந்துள்ளது.

Leave a Response