சந்தானத்திற்காக இசையமைப்பாளராக மாறினார் சிம்பு…!


சின்னத்திரையில் இருந்த சந்தானத்தை வெள்ளித்திரைக்கு அழைத்துவந்த தான் இயக்கிய ‘மன்மதன்’ படம் மூலம் அவரது திறமையை வெளியுலகுக்கு அறிமுகப்படுத்தியவர் சிம்புதான். இப்போது ஆச்சர்யமான ஒன்றாக சந்தானம் நடிக்க இருக்கும் “சக்க போடு போடு ராஜா” படத்திற்கு சிம்பு இசையமைக்க உள்ளார்..

தனது தந்தை விஜய.டி.ராஜேந்தரைப் போலவே, சிம்புவுக்கு பன்முகத் திறமை உண்டு. குறிப்பாக பாடல், இசை ஆகியவற்றில் அவருக்கு நல்ல பரிட்சயம் உண்டு. இதுவரை பாடகராக மட்டுமே அறியப்பட்டு வந்த சிம்பு, தற்போது சந்தானத்தின் ‘சக்க போடு போடு ராஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார்.

.”எனது காட் பாதர் சிம்பு முதன்முறையாக எனது ‘சக்க போடு போடு ராஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்” என சந்தானமும் முதன் முறையாக சக்கபோடு போடு ராஜா படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளேன். இது சந்தானத்திற்காக மட்டும்தான். புதிய பயணம் துவங்குகிறது. உங்களுடைய அன்பும் ஆதரவு தேவை.”என சிம்புவும் கூறியுள்ளனர்.

Leave a Response