முதன்முறையாக தந்தையின் தயாரிப்பில் நடிக்கிறார் ராணா..!


நடிகர் ராணா டகுபதி.. பிரபல தயாரிப்பளரான ராமாநாயுடுவின் பேரனான இவர் தெலுங்கில் 2010ல் லீடர் படத்தின் மூலம் அறிமுகமானார்.. அஜித்தின் ‘ஆரம்பம்’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர், பின்னர் ‘பாகுபலி’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் அனைவருக்கும் தெரிந்த முகமாக மாறிவிட்டார்.. இதெல்லாம் தெரிந்த கதை தான்.

இவரது தந்தை சுரேஷ் டகுபதியும் மிகப்பெரிய தயாரிப்பாளராக வலம் வருபவர்.. ராணா கிட்டத்தட்ட இருபது படங்களுக்கு மேல் நடித்துவிட்டாலும் தனது தந்தை தயாரிப்பில் இன்னும் ஒரு படத்தில் கூட நடித்ததில்லை.. அந்த மனக்குறையை போக்கும் விதமாக இவரது தந்தை சுரேஷ் டகுபதி ராணாவை வைத்து மிகப்பெரிய பட்ஜெட்டில் படம் ஒன்றை தயாரிக்க இருக்கிறாராம். இதுபற்றிய விரிவான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அறிவித்திருக்கிறார் ராணா.

Leave a Response