சிபிராஜூக்கு ஏறுமுகம்


ஒரு இடைவெளிக்குப் பிறகு சிபிராஜ் நடிப்பில் வெளியான ‘நாய்கள் ஜாக்கிரதை’, ‘ஜாக்சன் துரை’ ஆகிய படங்கள் அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தைக் கொடுத்தன. அப்படங்களைத் தொடர்ந்து சிபிராஜ் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் ’கட்டப்பாவை காணோம்’. இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வரும் இப்படம் விரைவில் வெளியாகும் என்று ஏதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படம் வெளியாவதற்கு முன்னதாகவே சிபிராஜ் தனது அடுத்த பட அறிவிப்பு செய்துள்ளார். ‘கட்டப்பாவை காணோம்’ படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படமாக விஜய் ஆண்டனி நடிப்பில் ‘சைத்தான்’ படத்தை இயக்கி வரும் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் சிபி ராஜ்.

இப்படத்தின் பெயர் மற்றும் இதர நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்களுடன் கூடிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பை நவம்பர் மாதத்தில் தொடங்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

ஒரு படம் வெளிவருமுன்பே அடுத்த படத்தைத் திட்டமிட்டு அறிவிக்குமளவுக்கு வேகமாகச் செயல்படுவதைக் கண்டு, இனி அவருக்கு ஏறுமுகம்தான் என்று அனுபவசாலிகள் சொல்கிறார்கள்.

Leave a Response