பரபரப்பான வேலை ஒன்றுதான் ஒருவருடைய சங்கடங்களையும் மன வருத்தங்களையும் தூக்கி தூரப்போட வல்லது. மனைவியுடன் விவாகரத்து என்கிற மிகப்பெரிய சோர்விலிருந்து மெண்டு வருவதற்காக சினிமாவில் இன்னும் கூடுதல் நேரம் அர்ப்பணிக்க தயாராகி விட்டார் இயக்குனர் ஏ.எல்.விஜய்.. தற்போது பிரபுதேவா-தமன்னா கூட்டணியில் ‘தேவி’ படத்தை முடித்து ரிலீசுக்கு தயாராக வைத்துவிட்டார்.
அடுத்ததாக புதிய படத்தையும் அதிரடியாக ஆரம்பித்துவிட்டார். கதாநாயகன் ஜெயம் ரவி. நாயகியாக பாலிவுட் சூப்பர்ஸ்டாராக கொடிகட்டி பறந்த திலீப்குமாரின் பேத்தி சாயிஷா சைகல் என்பவர் தமிழுக்கு அறிமுகமாகிறார். வழக்கமாக ஜி.வி.பிரகாஷ் தான் விஜய் படங்களில் இசையமைப்பார்… அவர்தான் இப்போ ஹீரோவாக பிசியாகி விட்டாரே.. அதனால் இந்தமுறை ஹாரிஸ் ஜெயராஜுடன் இணைந்து பணியாற்ற இருக்கிறார் ஏ.எல்.விஜய்.