அஜித்தை தொடர்ந்து விஜய்க்காக விட்டுக்கொடுத்தார் லாரன்ஸ்..!


விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ். ஆம்.. அஜித்திற்காக தான் வைத்திருந்த ‘வேதாளம்’ டைட்டிலை விட்டுக்கொடுத்த லாரன்ஸ், இப்போது விஜய் படத்திற்காக தான் ஏற்கனவே பதிந்து வைத்திருந்த ‘பைரவா’ டைட்டிலை விட்டுக்கொடுத்துள்ளார்.. பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிக்கும் படத்தின் தலைப்புக்காக பல்வேறு பெயர்களை பரிசீலித்து வந்தது படக்குழு.

இயக்குநர் பரதன் ‘பைரவா’ என்ற தலைப்பு பொருத்தமாக இருக்கும் என கூற அதையே படக்குழுவும் முடிவு செய்திருக்கிறார்கள். ஆனால், அந்த தலைப்புக்காக விண்ணப்பித்த போது, ‘பைரவா’ தலைப்பு இயக்குநர் லாரன்ஸிடம் இருப்பது தெரியவந்ததுள்ளது. இறுதியில் படக்குழு லாரன்ஸிடம் அணுகியபோது, நண்பர் விஜய் படத்துக்குத்தானே.. தாரளாமாக எடுத்துக் கொள்ளுங்கள் என கொடுத்திருக்கிறார்.

Leave a Response