ரேடியோ மிர்ச்சி பண்பலை வானொலி நிறுவனம் ஆண்டுதோறும் இசை விருதுகள் வழங்கிவருகிறது. 2009 ஆம் ஆண்டு முதல் விருதுகள் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
2015 ஆம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வு ஜூலை 27 ஆம் தேதி ஐதராபாத் ஜே ஆர் சி கன்வென்ஷன் அரங்கில் நடந்தது.
நடிகர் விக்ரம், குஷ்பு உட்பட பலர் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.
விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது இசையமைப்பாளர் தேவாவுக்கு வழங்கப்பட்டது.
சிறந்த இசையமைப்பாளருக்கான விருது அனிருத்துக்கு வழங்கப்பட்டது.
ஆகாயம் தீப்பிடிச்சா நிலா தூங்குமா’ என்ற மெட்ராஸ் பட பாடல் வரிகளுக்காக கடந்த ஆண்டு விருது பெற்ற கவிஞர் கபிலன், ஐ படத்தில் இடம்பெற்ற ‘என்னோடு நீயிருந்தால், உயிரோடு நானிருப்பேன்’ பாடல் வரிகளுக்காக இந்த ஆண்டும் சிறந்த பாடலாசிரியருக்கான மிர்ச்சி விருது பெற்றிருக்கிறார்.
கடந்த ஆண்டில் இசைரசிகர்களின் தேர்வும் அந்தப்பாடல்தான் என்பதால் ஆண்டின் சிறந்த பாடல் விருதையும் அந்தப்பாடல் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.