
திரையுலகில் நீண்ட நாட்களாகவே உள்ள கேள்விதான்.. ஆனால் இதற்கான விடையைத்தான் பல இயக்குனர்கள் தேடி அலைந்து, முயற்சி செய்து மூச்சு வாங்குகிறார்கள்.. அஞ்சலி, ரோஜா என்கிற விருதுப்படமும் எடுப்பார்… தளபதி போல கமர்ஷியலும் கொடுப்பார் மணிரத்னம்.. ஆனால் அவர் அறிமுகமானது ‘பகல் நிலவு’ என்கிற ஆக்சன் படம் மூலமாகத்தானே..
இன்றுவரைக்கும் இயக்குநர் பாலாவின் சில படங்கள் தேசிய விருதுகளை பெற்றுள்ளன.. அவரது ஒவ்வொரு படமும் வெளியாகும்போது தேசிய விருதுக்கு அனுப்பப்படுமா, தேசிய விருது பெறுமா என்கிற எண்ணம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. ஆனால் பாலாவின் படங்கள் கமர்ஷியலுக்கு உண்டான ஆக்சன், காமெடி என தேவையான மூலக்கூறுகளை கொண்டே வெளியாகின்றன.. நந்தா, பிதாமகன் எல்லாம் இந்தவகைதான்.
இப்போது விஷயத்துக்கு வருவோம்.. ‘காக்காமுட்டை’ என்கிற படத்திற்கு தேசிய விருது வாங்கிததந்த இயக்குநர் மணிகண்டன், அவரது அடுத்த படமான் ‘குற்றமே தண்டனை’ படத்தையும் கிட்டத்தட்ட அதேபாணியில் இயக்கியுள்ளதாகத்தான் சொல்லப்படுகிறது.. அவரும் அதை மறுக்கவில்லை..
ஆனால் அந்தப்படத்தை முடித்துவிட்டு தற்போது விஜய்சேதுபதியை வைத்து பக்காவான ஆக்சன் படம் ஒன்றை இயக்கியுள்ளாரம். தனக்குண்டான பாப்புலாரிட்டியை வைத்து கமர்ஷியல் ரூட்டுக்குள் புகுந்து காசு சம்பாதிக்கப்போகிறாரா என்பது நம் கேள்வியல்ல.. அதேசமயம் தேசிய விருது என்கிற இலக்கணத்திற்கு உட்பட்ட படத்தை எடுத்த இவரால் கமர்ஷியல் ரூட்டில் சக்சஸ் கொடுக்க முடியுமா..? அதுதான் கேள்வி.


