போட்டியாளர்களை ஒருங்கிணைத்த மக்கள் தொடர்பாளர்கள் சங்க விழா

திரைப்பட மக்கள்தொடர்பாளர்கள் சங்கத்துக்கான  தேர்தல் , கடந்த ஜூன் 19 -2016 அன்று நடைபெற்றது. அன்றே அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி சங்கத்தின்  தலைவராக  டைமண்ட் பாபு, செயலாளராக ஆ. ஜான், பொருளாளராக விஜயமுரளி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

64 உறுப்பினர்கள் கொண்ட  சங்கத்தில்  59 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள். தேர்தலில்   57 உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர்.

 டைமண்ட் பாபு 39 வாக்குகளுடன் தலைவராக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து நின்ற நெல்லை சுந்தரராஜன், ஆதம்பாக்கம் ராமதாஸ் ஆகியோர் தலா 9 வாக்குகள்  பெற்றனர்.

பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட
ஆ. ஜான் 37 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பெரு துளசி பழனிவேல் 20 வாக்குகள் பெற்றார்.

பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்ட விஜயமுரளி 35 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுரேஷ் சந்திரா 22 வாக்குகள் பெற்றார்.

மற்ற பதவிகளுக்குப் போட்டியிட்டு வென்றவர்கள்:

துணைத் தலைவர்கள் : வீகே சுந்தர் (31), பிடி செல்வகுமார் (32)

இணைச் செயலாளர்கள்: நிகில் முருகன் (33), யுவராஜ் (32)

செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு, அந்தணன்,ஆறுமுகம்,பாலன்,கிளாமர் சத்யா,மேஜர்தாசன்,சக்திவேல்,சரவணன்,வெட்டுவானம் சிவகுமார், ரேகா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்தத் தேர்தலை வழக்கறிஞர் சங்கர் தேர்தல் அதிகாரியாக இருந்து நடத்திக் கொடுத்தார். உதவி தேர்தல் அதிகாரிகளாக கண்ணதாசன், பாரிவள்ளல் மற்றும் விபி மணி ஆகியோர் செயல்பட்டனர்.

தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பொறுப்பேற்றுக் கொள்ளும் விழா ஜூலை 6 ஆம் தேதி, சென்னை இரசியக் கலாச்சார மையத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் நடிகர் சங்கத்தலைவர் நாசர், துணைத்தலைவர் பொன்வண்ணன், தயாரிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்த டி.சிவா உட்பட பல திரைப்பட சங்கங்களின் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். நடிகர் சங்கத்தேர்தலுக்குப் பிறகு நாசர் கலந்துகொண்ட இநத் விழாவில் ராதாரவியும் கலந்துகொண்டார்.

தயாரிப்பாளர் சங்கத்திலும் இருவேறு கருத்துடையவர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

ஒவ்வொரு அமைப்பிலும் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட குழுக்கள் இருப்பது இயற்கை.திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் பாலமாகச் செயல்படும் தொடர்பாளர்கள், இவ்விழாவின் மூலம் ஒரே அமைப்புக்குள் இருக்கும் போட்டியாளர்களையும் ஒருங்கிணைத்து போட்டிகள் இருந்தாலும் நாம் ஒரே குடும்பம் என்பதை உணர்த்தும் வகையில் விழாவை நடத்தினார்கள்.

தேர்தலை சிறப்பாக நடத்திக் கொடுத்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கர், இவ்விழாவில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

Leave a Response