தமிழில் நாசர், இந்தியில் அமிதாப்பச்சன் – ஸ்டீபன்ஸ்பீல்பர்க் பட ஆச்சரியங்கள்

கனவுலகக் கதைகளுக்கு உருவமளித்து அவற்றைத்  திரைப்பட வடிவில் அளிப்பதில் திறமை வாய்ந்தவர் ஸ்டிவன் ஸ்பீல்பர்க் என்றால் அது மிகையாகாது.

ஈ.டி, ஜுராஸிக் பார்க், அட்வென்சர்ஸ் ஆப் டின் டின் உள்ளிட்ட ஏராளமான வசூல் சாதனை படைத்த பிரம்மாண்ட வெற்றிப் படங்களை இயக்கிய ஸ்டிவன் ஸ்பீல்பர்கின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு “தி பிஎஃப்ஜி” (The BFG).

இப்படத்தின் சிறப்பம்சம் யாதெனில், இந்தத் தலைமுறையின் சிறந்த கதாசிரியர்களான ரோல் டால்,வால்ட் டிஸ்னி, ஸ்டிவன் ஸ்பீல்பர்க் ஆகிய மூவரும் “தி பிஎஃப்ஜி” (The BFG) படத்திற்காக இணைந்திருப்பதுதான்.

இப்படத்தில், அதிசயங்கள் மற்றும் ஆபத்துகள்  நிறைந்த,  அளவில் மிகப்பெரிய மனிதர்கள் வாழும் நாட்டிற்கு இராட்சத மனிதன் ஒரு சின்ன சிறுமியை அழைத்துச் செல்கிறான். அங்கு நடக்கும் நிகழ்வுகள்தாம் கதை.

இப்படத்தின் கதையை எழுதிய ரோல் டாலின் நூறாவது பிறந்தநாளான ஜூலை 15, 2016ம் தேதி இப்படம் உலகமெங்கும் கோலாகலமாக வெளியாகின்றது.

ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் இப்படத்தை ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிரம்மாண்டமாக இப்படத்தை இந்தியாவில் வெளியிடுகின்றது.

படத்தில் வருகிற இராட்சத மனிதன் கதாபாத்திரத்துக்கு   தமிழில்   நடிகர் நாசர்  குரல் கொடுத்திருக்கிறார். வழக்கமாக ஓரிரு நாட்களில் முழுப்படத்துக்கும் குரல்பதிவு செய்துவிடும் வல்லமை கொண்ட நாசர், இந்தப் படத்துக்காக ஒரு வாரம் பணியாற்றியிருக்கிறார். மிகவும் நுணுக்கமாகக் கவனித்து குரல்பதிவு செய்தார் என்று சொல்லப்படுகிரது.

இந்தப்படத்தின் இந்திப்பதிப்புக்கு அமிதாப்பச்சன் குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response