
சசிகலா நேற்றிரவு வெளியிட்டுள்ள அறிவிப்பில் அவர் கட்சி கூட்டணி சேர்ந்துள்ள கட்சிகள்,அக்கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் ஆகியனவற்றை வெளியிட்டுள்ளார்.
அதன்விவரம்…
ப.தேவராஜனை பொதுச்செயலாளராகக் கொண்ட அகில இந்திய பார்வர்ட் ப்ளாக் மத்தியகுழுவுக்கு திருவாடானை,ஸ்ரீவைகுண்டம்,திருப்பூர் தெற்கு ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
என்.பத்மனாபன் நிறுவனர் அனைத்து நாயுடு,நாயக்கர் பேரவைக்கு போடி நாயக்கனூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
த,புஷ்பராஜ் நிறுவனத்தலைவர், வாகை தமிழர் முன்னேற்ற சங்கத்துக்கு ஆலங்குடி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
வாழவந்தியார் கே.சரவணன் நிறுவனர், தமிழர் நீதிக்கட்சிக்கு பரமத்தி வேலூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ந.ஜோதி முத்துராமலிங்கத்தேவர்,தலைவர், பசும்பொன் தேசியக் கழகத்துக்கு கோவில்பட்டி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அனந்தலை எம்.தங்கராஜ், மாநிலத்தலைவர் இந்திய குடியரசுக் கட்சி (பீமராவ் அம்பேத்கர்) கட்சிக்கு திருமயம், கீழ்வைத்தினான்குப்பம் (தனி) ஆகிய இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் மொத்தம் ஆறு கூட்டணிக்கட்சிகளுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சசிகலாவின் இந்தக் கூட்டணி அறிவிப்புக்குப் பின்னர்தான் தமிழ்நாட்டில் இப்படியெல்லாம் கட்சிகள் இருக்கின்றன என்பதே தெரியவந்துள்ளது என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.


