ஓபிஎஸ்ஸும் கூட்டணியில் இணைவார் – பாஜக கருத்தால் பரபரப்பு

அதிமுக கூட்டணியில் பாஜக,தமாகா, பாமக (அ) ஆகிய கட்சிகள் உள்ளன. பாமக (ரா), தேமுதிக, புதிய தமிழகம் ஆகிய கூட்டணிக் கட்சிகளுடன் இன்னும் கூட்டணி பேசவில்லை.

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்மையில், புதுக்கோட்டை மற்றும் திருச்சிக்கு வந்தபோது சந்திக்க எடப்பாடி நேரம் கேட்டார். ஆனால் அவர் சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை. டெல்லி சென்றவுடன் தன்னை வந்து சந்திக்கும்படி கூறிவிட்டார்.

அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் இருந்து டெல்லி சென்று அமித்ஷாவை அவரது வீட்டில் சந்தித்தார். அப்போது, கூட்டணி குறித்து பேசச் சொன்னேன். நீங்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. எந்தக் கட்சிகளுடனும் பேசவில்லை. ஒரு தலைவரிடம் கூட நீங்கள் சமாதானமாகச் செல்லவில்லை. இதனால் உங்களிடம் கூட்டணி பேசவே யாரும் விரும்பவில்லை. அன்புமணியைக் கூட நாங்கள்தான் அனுப்ப வேண்டியதாகிவிட்டது. அடுத்து, இராமதாஸ் தலைமையிலான பாமக, புதிய தமிழகம், ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோருக்கு நாங்கள் தொகுதிகளை ஒதுக்கிக் கொள்கிறோம். நீங்கள், பாமக (அ), தேமுதிகவுக்கு மட்டும் தொகுதிகள் கொடுங்கள் என்று கூறியுள்ளார்.

அமித்சாவைச் சந்தித்துவிட்டு முகம் இருண்டு வெளியே வந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல், ஓபிஎஸ்,சசிகலா ஆகியோருக்கு அதிமுகவில் இடமில்லை என்று எப்போதும் போலவே எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.அவர் கருத்துக்கு மாறாக, அவர்கள் இருவரும் இந்தக்கூட்டணிக்கு வருவார்கள்,அடுத்தடுத்து அது நடக்கும் என்றும் பாஜக தரப்பில் சொல்லப்படுகிறது.

என்ன நடக்கப் போகிறதெனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Response